உத்திரபிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் நகரில் நரோரா காட் என்ற பகுதியில் உள்ள கங்கை கால்வாயிலிருந்து 10 அடி முதலில் திடீரென வெளியே குதித்துள்ளது. இதனை அங்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மீண்டும் ஆற்றுக்குள் செல்வதற்காக இரும்பு தடுப்பின் மீது முதலை ஏறியது. துண்டு ஒன்றை பயன்படுத்தி முதலையின் தலையை மூடி அதன் கால்களையும் கட்டி விட அதிகாரிகள் முயற்சித்த நிலையில் மீட்பு குழுவினரை அது தாக்க முயற்சித்தது. பிறகு கயிறுகளைக் கொண்டு அதன் கால்களை கட்டி எச்சரிக்கையுடன் செயல்பட்டு கங்கை கால்வாயில் கொண்டு சென்று விட்டனர். அந்த முதலை இரும்பு தடுப்பின் மீது ஏறும் பரபரப்பு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.