
மத்திய அரசு அறிவித்த 69வது தேசிய திரைப்பட விருதுகளில், 2021ஆம் ஆண்டுக்கான தேசிய சிறந்த நடிகை விருது இரு நடிகைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஆலியா பட் (கங்குபாய் கத்தியவாடி) மற்றும் கிருதிசனன் (மிமி) ஆகியோர் பெற்றனர். மேலும் கங்குபாய் படத்தின் எடிட்டர் சிறந்த எடிட்டராகவும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். புருஷோத்தமாச்சார்யு (தெலுங்கு) சிறந்த திரைப்பட விமர்சகர் பிரிவில் விருதும் பெற்றார்.