
சண்டிகர் மாநிலத்தில் கென்யாவின் லுண்டா என்ற 2 வயது குழந்தை தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளது. இந்த சிறுவன் வீட்டில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் மூளை சாவு அடைந்தான். இதன் காரணமாக சிறுவனின் பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்யும் முன் வந்தனர்.
அதன்படி pancreas ஒருவருக்கும், கிட்னி ஒருவருக்கும், 2 பேருக்கு கண் தானமும் செய்துள்ளான். மேலும் இதன் மூலம் இறப்பிலும் அந்த குழந்தை 4 பேரை வாழ வைத்துள்ளது. பெற்றோரின் இந்த செயலால் நால்வர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். மேலும் இதன் மூலம் இந்தியாவில் மிக சிறிய வயதில் உடல் உறுப்பு தானம் செய்த சிறுவன் என்ற பெருமை கென்யாவின் லுண்டாவை சேர்ந்துள்ளது.