தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பாக ஒவ்வொரு வருடமும் 11 சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதை வெளியிட ஒரு லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்திலும் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் tn.gov.in/forms என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் விண்ணப்பிக்க ஜூலை 31 தான் கடைசி நாள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.