திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மகளிர் உரிமைத்துறையின் கீழ் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது எம்பிராய்டரி தையல் மெஷின் வழங்கப்பட இருக்கிறது.

இந்த திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.72,000 ஆக இருக்க வேண்டும். அதன்பிறகு எம்பிராய்டரி தையல் பயிற்சி பெற்ற சான்று அவசியம். இந்த திட்டத்தில் ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டவர் மற்றும் விதவை ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான கால அவகாசம் ஜூலை 31 ஆகும்.