
மார்ச் மாதம் முடியும் வரை ஆவின் நெய், பன்னீர் தள்ளுபடி விலையில் விற்கப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின், பால் மற்றும் நெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. முன்னதாக நெய் லிட்டருக்கு 50 ரூபாய் தள்ளுபடி, 200 கிராம் பன்னீர் 110 ரூபாய் என சலுகை விலையில் விற்கப்பட்ட நிலையில் அதனை மார்ச் மாதம் இறுதி வரை நீட்டித்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது