
தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் மகளிர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இந்த மாதத்திற்கான தவணையானது இன்று காலை 10 மணியளவில் பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி இந்த திட்டத்திற்கான ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் முதல் தற்போது வரை 9 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 10ஆவது தவணை இன்று வரவு வைக்கப்பட்டது. உங்களுடைய வங்கி கணக்கில் ரூ.1000 வந்துவிட்டதா? செக் பண்ணி பாருங்க.