
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்கிறது. அந்த மாநிலத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏவாக பால்கர் சிங் என்பவர் இருக்கிறார். இவர் பஞ்சாப் மந்திரி சபையில் மந்திரி ஆக இருக்கிறார். இந்நிலையில் தன்னிடம் வேலை கேட்ட இளம்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியான சீண்டலில் பால்கர் சிங் ஈடுபட்டுள்ளது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னிடம் வேலை கேட்ட இளம்பெண்ணை வீடியோ காலில் மந்திரி தொடர்பு கொண்டார்.
அதன்பிறகு அந்த பெண்ணிடம் ஆடைகளை கழற்றுமாறு கூறி நிர்வாணமாக பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் அம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.