
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடந்த பார்ட்டி ஒன்றில் 24 வயதான பவ்னா சிங் என்ற பெண் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்ட்டியில் கலந்து கொண்டபோது, அவரது கண் வழியாக துப்பாக்கி பாய்ந்ததால் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக பவ்னா கல்லால் தாக்கப்பட்டதாக கூறி 4 பேர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துவந்து, பின்னர் அவரது குடும்பத்தினரை அழைக்கிறோம் என கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மருத்துவர்கள் பவ்னாவின் கண்ணில் துப்பாக்கி துண்டு இருந்ததாக உறுதி செய்த பின், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பவனா சிங் மகாலட்சுமி நகர் பகுதியில் நான்கு பேருடன் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்தது தெரியவந்தது. சம்பவம் நடந்த போது பார்ட்டில் வைத்து பவ்னாவுக்கும் ஆஷி என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆஷிக் கையில் வைத்திருந்த துப்பாக்கி குண்டு பவ்னா கண்ணில் பாய்ந்தது. பின்னர் நான்கு பேரும் இணைந்து பவ்னாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.