
இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை செய்து கண்ணின் அமைப்பு மாற்றிக்கொண்ட வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இருக்கும் ஆண்களு,ம் பெண்களும் தங்களுடைய முகம் மற்றும் உடல் அழகுக்காக என்ன வேண்டுமானாலும் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்கள் .முகத்தின் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்ல விஷயம் என்றாலும் ஒரு சிலர் உச்சத்திற்கே சென்று தன்னுடைய முகம் மற்றும் உடலமைப்பையே மாற்றி கொள்கிறார்கள். சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் பிறகு பிரபலமாக இருக்கிறார்கள்.
ஆனால் சாதாரண மக்களும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த வகையில் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளம் பெண் ஒருவர் அவருடைய கண்ணின் அமைப்பை மாற்றியுள்ளார். நன்றாக இருந்த கண்களை நீள் வட்ட வடிவில் மாற்றியுள்ளார். இதன் போது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதெல்லாம் நல்லாவா இருக்கு? என்று இணையவாசிகள் கூறி வருகிறார்கள்.