டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர் ஒருவர் டின்டர் செயலி மூலமாக வர்ஷா என்ற இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்தப் பெண் தனது பிறந்த நாளை கொண்டாட கிழக்கு டெல்லியில் உள்ள பிளாக் மிரர் கபே என்ற உணவகத்திற்கு வருமாறு இளைஞரை அழைத்துள்ளார். இருவரும் ஒன்றாக உணவகத்திற்குச் சென்று சிற்றுண்டிகளை சாப்பிட்ட நிலையில் வர்ஷா தனது குடும்பத்தினர் ஒருவருக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து அவசரமாக கிளம்பினார்.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரிடம் உணவாக ஊழியர் சாப்பிட்ட தொகை காண ரசீதை வழங்கிய நிலையில் அதனை கண்ட இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் அவர் செலுத்த வேண்டிய தொகை ரூ.1,21,917.50 என அதில் இருந்தது. இது குறித்து உணவக மேலாளர் இடம் அவர் கேட்டபோது அவரை அவர்கள் தனியாக அழைத்து மிரட்டியதால் வேறு வழி இல்லாமல் அந்த பணத்தை அவர் செலுத்தியுள்ளார். பிறகு காவல் நிலையத்திற்குச் சென்று அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது.

அதாவது அந்த குறிப்பிட்ட உணவகத்திற்கு மொத்தம் மூன்று உரிமையாளர்கள் இருப்பதாகவும் அவர்கள் மேஜை மேலாளர்கள் என்ற பெயரில் சிலரை நியமித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த உணவகத்தில் பணியாற்றும் மேசை மேலாளர் ஆரியன் என்பவர் சம்பந்தப்பட்ட இளைஞரிடம் ஆன்லைன் செயலி மூலம் வர்ஷா என்ற பொய்யான பெயரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த திட்டத்தில் 25 வயது பெண் ஒருவரும் உடந்தையாக செயல்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் திட்டமிட்டு அவரை உணவகத்திற்கு வரவழைத்து 1.2 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.