கேரள மாநிலத்தின் மூணாறு அருகே ஏற்பட்ட தனிப்பட்ட வீடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்லதண்ணி பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர், கணவன் மற்றும் ஒரு பிள்ளையின் தந்தையாக இருந்தும், தனது கணிணி பயிற்சி மையத்துக்கு அடிக்கடி வருவதாக கூறப்படும் ஒரு இளம்பெண்ணுடன் நெருங்கிய உறவிலிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நட்புறவு காதலாக மாறிய நிலையில், இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். அப்போது, இளம்பெண்ணின் அனுமதியின்றி, இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை அவரது செல்போனில் பதிவுசெய்துள்ளார் கணேஷ். இதையடுத்து, அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தன்னை விட்டுவிட்டு வேறு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதை கண்டித்த கணேஷ், பழைய வீடியோவை அந்த மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை உடனடியாக திருமண நிச்சயத்தை ரத்து செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் மூணாறு போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நல்லதண்ணி பகுதி மட்டுமல்லாமல் மூணாறு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.