
தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் மே 12ஆம் தேதி அதாவது இன்று வெள்ளிக்கிழமை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த முகாம் காலை 10.30 மணிக்கு நடைபெறும் எனவும் பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் தங்களின் சுயவிவரம் மற்றும் கல்வி சார்ந்த கருடன் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான விவரங்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.