,தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் 25ஆம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில் 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த முகாம் நவம்பர் 25ஆம் தேதி கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளியில் காலை 8 மணி முதல் இதில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐடிஐ, தொழிற்கல்வி மற்றும் டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி கொண்டவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.