செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் வஜ்ரவேல் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி டெய்சி ராணி பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 21-ஆம் தேதி இளைய மகனுக்கும் டெய்சி ராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் டெய்சி ராணி கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது டெய்சி ராணி ஒரு ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் நேற்று காலை வசந்த் நகர் கடற்கரை பகுதியில் டெய்சி சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டெய்சி ராணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.