பிரபல யூடியூபர் இர்பான் ரம்ஜான் தினமான நேற்று முன்தினம் இவர் தன்னுடைய குடும்பத்தோடு காரில் சென்று இல்லாதவர்களுக்கு உணவை வழங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் உணவை பறித்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு இர்பான் அசிங்கமாக இல்லையா? இப்படியா வாங்குவிங்க? கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா? என்று திட்டியுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜே பார்வதி இவர் பெரிய ஜமீன் பரம்பரை. கார் உள்ள உக்காந்துட்டு தான் இல்லாத மக்களுக்கு சேவை செய்வார். மனைவியை அவ்வளவு பாதுகாப்பா பாக்குறனா இந்த மாதிரி சோசியல் ஆக்டிவிட்டீஸ்க்கு கூட்டிட்டு வந்திருக்கக் கூடாது. வீட்ல விட்டுட்டு வந்து இருக்கணும். இந்த புது பணக்காரங்க பண்ற கூத்து இருக்கே எப்பா முடியல.. இங்கதான் அவன் புத்தி என்னங்கறது வெளிய வருது” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.