டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசன் நேற்று தொடங்கியது. ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் தொடங்கிய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டிக்கான டாஸ்  போடப்பட்டதில், டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன்  ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர் 8விக்கெட் இழப்புக்கு 170 சேர்த்தது. அதன் பிறகு ஆடிய பெங்களூர் அணி 16.2 ஓவரில் மூன்று விக்கெட் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கடந்த ஐபிஎல் சீசனில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடியதால் இந்த முறை அவரை கொல்கத்தா அணியானது 23.75 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதனால் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தனார். ஆனால் அந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றம் கொடுக்கும் விதமாக முதல் போட்டியிலேயே ஒரு சிக்சர் கூட அடிக்காமல் ஏழு பந்துகளில் வெறும் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இவர் ஆட்டமிழந்த உடனே சமூக வலைதளங்களில் வெங்கடேஷ் ஐயர் தன்னுடைய 23.75 கோடி விலைக்கு ஏற்றவாறு விளையாடவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இதுவரை எதுக்குங்க இவ்வளவு தொகை கொடுத்து எடுத்தீங்க என்று விமர்சித்து வருகிறார்கள்.