நம் அனைவரிடமே வங்கி கணக்கு இருக்கும்.  நிறைய பேர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் கூட வைத்திருப்போம்.  ஏனெனில் வங்கி கணக்கு என்பது மிகவும் முக்கியமானது. பணத்தை டெபாசிட் செய்யவும், சேமிக்கவும் பரிவர்த்தனை செய்யவும் பல காரணங்களுக்காகவும் வங்கி கணக்கு வைத்திருப்போம். வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கேஒய்சி சரிபார்ப்பு செய்ய வேண்டியது அவசியம்.

KYC சரிபார்ப்பை வங்கி வாடிக்கையாளர்கள் அடிக்கடி செய்ய வேண்டியது இருக்கும். ஒரு வேலை வங்கியில் இருந்து kyc சரிபார்ப்பதற்கான மெசேஜ் வந்திருந்தால் அதை புறக்கணிக்க வேண்டாம். உடனே அந்த வேலையை முடிக்க வேண்டும். சரியான நேரத்தில் KYC சரிபார்ப்பு முடிக்காவிட்டால் வங்கி கணக்கு மூடப்படும். அதன் பிறகு அந்த கணக்கில் எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்ய முடியாது.