
தமிழகத்தில் தற்போது 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் வீட்டு பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், வழிபாட்டுதலங்கள்,கைத்தறி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி 0 to 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ₹4.60ல் இருந்து 4.80ஆக உயர்வு.
401 to 500 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் ₹6.15ல் இருந்து ₹6.45ஆகவும்
501 to 600 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் ₹8.15ல் இருந்து ₹8.55ஆகவும்
601 to 800 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் ₹9.20ல் இருந்து ₹9.65ஆகவும் .
801 to 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹10.20ல் இருந்து ₹10.70ஆகவும் உயர்ந்துள்ளது
மேலும் 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ₹11.80 வசூலிக்கப்படும்.
இந்த நிலையில் 100 யூனிட்டுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கு அதிகமான பயனாளிகள் 100 யூனிட்டுக்கு குறைவாகவே மின்சாரத்தை பயன்படுத்துவதால் அவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.