மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 16 வது தவணை பிப்ரவரி 28ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இதனைப் பெற இ கேஒய்சி முடித்திருக்க வேண்டும். ஜனவரி 31ஆம் தேதிக்குள் இதனை முடிக்காதவர்களுக்கு இந்த முறை பணம் கிடைக்காது. தற்போது கேஒய்சி முடித்தால் அடுத்த தவணை பெறலாம்.