
2008 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர் தான் சுரேஷ் ரெய்னா. இந்திய அணியின் கேப்டனாக இருந்த போதும் சரி, சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த போதும் சரி, சுரேஷ் ரெய்னா அளவிற்கு தோனி வேறு யாருக்கும் ஆதரவாக நின்றது கிடையாது. 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் உத்தப்பாவை விளையாட வைக்கும் முடிவை கூட ரெய்னாவை ஆலோசித்த பிறகு தான் தோனி எடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.
இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவிடம் டெத் ஓவர்களில் சிறந்த பவுலர் யார் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், ஐஸ் பிரீத் பும்ரா என்று கூறினார். அடுத்து தொடர்ந்து சிறப்பாக விளையாடும் வீரர் யார் என்ற கேள்விக்கு மைக்கேல் ஹசி என்றும் எல்லா காலங்களிலும் சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு மகேந்திர சிங் தோனி என்றும் பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது