உத்திரபிரதேச மாநிலத்தில் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா (DDU) ரயில்நிலையத்தில் கடந்த வாரம் புறப்படும் 12487 ஜோக்பனி-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில் 40 வயதுடைய நிர்மலா தேவி என்ற பெண் ரயிலில் ஏற முயன்ற போது ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையிலான இடைவெளியில் கீழே விழ முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சிவகுமார் ஷர்மா அவரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதனையடுத்து துணிச்சலாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை . இந்த சம்பவம் பாதுகாப்பு பணியில் உள்ள அதிகாரிகளுடைய விழிப்புணர்வும், பொதுமக்களுக்கான அவர்களுடைய சேவையின் மீது என முழுமையான அர்ப்பணிப்பும் எப்படி இருக்கிறது? என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.