தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் தனது அரசியல் பயணம் குறித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை குறித்தும் விரிவாக விஜய் அவர்கள் பேசியிருப்பார். அதில் தமிழக வெற்றி கழகத்தின் எதிரிகளாக அவர் முன்னிறுத்தி இருப்பது ஒன்று பாஜக, மற்றொன்று திமுக ஆனால் இவை இரண்டின் பெயர்களையும் அவர் தெளிவாக மாநாட்டில் குறிப்பிடவில்லை. இதற்கு விஜய் அவர்களே பதில் அளித்திருப்பார். அதில்  பெயர் சொல்வதற்கு எனக்கு பயம் அல்ல அதை சொல்வதற்காக நாங்கள் இங்கே வரவில்லை.

ஆனால் இன்று போல் எப்போதும் இருக்க மாட்டோம் சொல்ல வேண்டிய இடங்களில் சொல்வோம் எனவும் தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்களுக்கு எதிரான கருத்துகள் தற்போது இணையத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதில், பிரபல பத்திரிகையாளர் கரிகாலன் என்பவர் பாசிச ஆட்சி நடத்துகிறார்கள் என கூறத் தெரிந்த விஜய் அவர்களுக்கு அதை செய்யக்கூடிய மோடி அவர்களின் பெயரை சொல்ல முதுகெலும்பு இல்லையா என கேள்வி எழுப்பி டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

என்ன உடை அணிய வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும், உயிர் வாழ வேண்டுமா கூடாதா என அனைத்தையும் நிர்ணயித்து பொதுமக்களின் வாழ்க்கையை சூறையாடும் பாசிச ஆட்சி நடத்தக்கூடிய பாஜகவையும் மோடியின் பெயரையும் குறிப்பிடுவதற்கான தைரியம் விஜய் அவர்களிடம் இல்லையா? முதுகெலும்பில்லாத விஜய் என கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார் இது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.