
இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் +972-547520711 மற்றும் +972-543278392 ஆகிய தொலைபேசி எண்களிலும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.