மகராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயுடன் பைக்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கிள் வந்த மூன்று இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாலை எடுத்து அந்த இளைஞரை வெட்ட முயன்றனர்.

நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர் உயிர் தப்பினார். அப்போது அந்த இளைஞரின் தாயார் துணிச்சலுடன் வெட்ட வந்த இளைஞர்களை நோக்கி கல்லை எடுத்து எறிந்து விரட்டி அடித்தார். தனது மகனுக்கு ஒரு. பிரச்சனை என்றதும் “துணிச்சலுடன் களமிறங்கி விரட்டி அடித்த”  தாயை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர். அந்த இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்ததில். அந்த இளைஞர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.

“>