
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் தேர்தல் பொறுப்பாளராக மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் ஈரோடு கிழக்கில் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்பிறகு திமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்தாலும் அனைவருக்கும் மூளையாக செயல்படுவது அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்று கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி எந்த கட்சியில் இருந்தாலும் குறுகிய காலத்தில் உயர் பதவிக்கு சென்று விடுவார். அவரிடம் இந்த பணியை கொடுத்தாலும் அதை சிறப்பான முறையில் செய்து முடிக்க கூடியவர். கொங்கு மண்டலத்தில் திமுக துவண்டு கிடந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் கொங்கு மண்டலத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை மாவட்ட பொறுப்பாளராக ஸ்டாலின் நியமித்தார். அதன் பலனாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு நல்ல வெற்றி கிடைத்தது. அதன் பிறகு எந்த பணியை கொடுத்தாலும் அதை கச்சிதமாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்க கூடியவர் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்று சொல்லப்படும் அளவுக்கு ஸ்டாலின் குட் புக்கில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கில் செந்தில் பாலாஜி வாக்காளர்களை விட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்களையே களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ய வைக்கலாம் என தற்போது முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே திமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதி தான் என்பதால் வாக்காளர்கள் யாரும் வேறு கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று திமுகவினர் நினைக்கிறார்களாம்.இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஈரோடு கிழக்கில் வெற்றி பெறுவதற்கு பல்வேறு விதமான வியூகங்களை வகுத்து வருகிறார். மேலும் ஈரோடு கிழக்கில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கூட அமைச்சர் செந்தில் பாலாஜி என் பக்கம் இருப்பதால் கண்டிப்பாக நான் வெற்றி பெற்று விடுவேன் என்று கூறினார். இதனால் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை களத்தில் இறங்கி ஈரோடு கிழக்கில் வெற்றி வாய்ப்பை நெருங்கிவிட்டார் என்று.