ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உட்பட 77 சுயேட்சைகள் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்களாய்வு அமைப்பு கருத்துக் கணிப்பு ஆய்வு  நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 39.5% வாக்குகள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதன் பிறகு அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவுக்கு 24.5% வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு 9.5% வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு 2 சதவீத வாக்குகளும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு 1.5 சதவீத வாக்குகளும், நோட்டாவிற்கு 2 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் 21 சதவீதம் பேர் இன்னும் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்பதை முடிவு செய்யாததால் கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மார்ச் 2-ம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.