
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறைவினால் உயிரிழந்த நிலையில் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துவிட்டது. அதன் பிறகு விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பு ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு திமுக அல்லது காங்கிரஸ் எந்த கட்சி போட்டுயிடுகிறது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் கட்சியாக தற்போது நாம் தமிழர் கட்சியின் போட்டியிடும் என்று சீமான் அறிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடும் என்று அதிரடியாக அறிவித்துவிட்டார். விரைவில் அந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பதையும் சீமான் அறிவிக்க உள்ளார்.