உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக போர் தொடர்ந்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது உக்கரைன் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் 75 பெருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.