
இன்றைய காலகட்டத்தில் மோசடியானது பல்வேறு வழிமுறைகளிலும் புதுப்புது விதமாக நடைபெற்று வருகிறது. என்னதான் விழிப்புணர்வோடு இருந்தாலும் ஏதாவது ஒரு மோசடி மூலமாக பணத்தை திருடி விடுகிறார்கள். அந்த வகைகளில் பான் கார்டு மூலமாக நடைபெறும் மோசடிகளும் ஏராளம். பான் கார்டு தவறாக பயன்படுத்துவது மோசடிக்கு வழிவகுக்கிறது. பான் கார்டு விவரங்களை மற்றவர்களிடமும் அல்லது சமூக வலைதளத்தில் பகிர்வதன் மூலமாக மோசடிகள் எளிதாக நடக்கிறது. இது போன்ற சூழலில் பான் கார்டு யாராவது எங்கும் எதற்காகவும் தவறாக பயன்படுத்தியிருக்கிறீர்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா? அதை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்க்கல்ம் வாங்க.
கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்ப்பதன் மூலம் ஒரு பயனர் தன்னுடைய பான் எண் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை அறிய முடியும். உங்களுடைய பான் கார்டில் வேறு யாராவது கடனைப் பெற்றிருக்கிறார்களா என்பதை அறிய, பயனர் பெயர், பிறந்த தேதி மற்றும் அவரது பான் கார்டு விவரங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளிட வேண்டும். அவ்வாறு உங்களுடைய பான் கார்டைப் பயன்படுத்தி எங்காவது கடன் வாங்கியது தெரியவந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் அளிக்கலாம்.