
இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்துள்ள மக்கள் அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளும் வழங்கப்படுகின்றன. ரேஷன் திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டின் ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்களுடைய ரேஷன் கார்டில் இ கேஒய்சி செய்து கொள்வது கட்டாயமாகும். அதற்கான கடைசி தேதி 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
KYC சரிபார்ப்பு செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது. நகர்ப்புறங்களில் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாயும் கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாயும் உள்ளவர்கள் ரேஷன் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். நகர்ப்புறங்களில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்கள் ஆவர். அதனைப் போலவே கிராமப்புறங்களில் சொந்தமாக டிராக்டர் அல்லது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.
புதிய ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இலவச மருத்துவ காப்பீட்டின் பலனையும் பெற முடியும். எனவே ரேஷன் திட்டத்தின் பலன்களை தொடர்ந்து பெற இகேஒய்சி செயல்முறையை முடிப்பது அவசியமாகும். அருகில் உள்ள ரேஷன் கடை அல்லது அரசு மையத்திற்கு சென்று உங்களுடைய ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை கொடுத்து பயோமெட்ரிக் தரவை வழங்க வேண்டும். இதற்கு ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தேவைப்படும். உரிய ஆவணங்களை கொடுத்து இ கே ஒய் சி அப்டேட் செய்து கொள்வது நல்லது. அப்படி இல்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தாகும் சூழலும் ஏற்படலாம்.