
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில் சிம்கார்டுகள் பயன்படுத்துவது என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. தற்போது சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் கார்டு என்பது அவசியமாகும். இருந்தாலும் சிலர் விதிகளுக்கு மாறாக போலி ஆதாரங்களை சமர்ப்பித்து அதிக எண்ணிக்கையில் சிம்கார்டுகளை வாங்குகின்றனர். அதனை வைத்து பல மோசடிகளும் நடைபெற்று வருவதால் உங்கள் ஆதரவை பயன்படுத்தி நீங்கள் ஒரு சிம் வாங்கி இருந்தால் மோசடி கும்பல் உங்களது ஆதாரை பயன்படுத்தி பல சிம் கார்டுகளை வாங்கலாம்.
எனவே உங்களுடைய பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதற்கு முதலில் tafcop.sancharsaathi.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆதார் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளிட்டு மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி என்னை பதிவிட வேண்டும். பிறகு உங்கள் பெயரில் இயங்கும் அனைத்து சிம் கார்டுகளின் பட்டியலும் தோன்றும். அதில் உங்களது ஆதார் கார்டுடன் எத்தனை சிம் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை உங்கள் அனுமதி இல்லாமல் வாங்கிய சிம்கார்டுகள் இருந்தால் அது குறித்து நீங்கள் தொலைத்தொடர்பு துறையிடம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது