தமிழகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் “குட் பேட் அக்லி”. இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து த்ரிஷாவின் கதாபாத்திரத்திற்கு எதிராக பலரும் விமர்சனங்கள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில், மற்றவர்களைப் பற்றி அர்த்தமற்ற விஷயங்களை பதிவிடும் நச்சுத்தன்மை உள்ள மக்களே, நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்கள்? எப்படி தூங்குகிறீர்கள்?.

சமூக ஊடகங்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைப் பற்றிய அர்த்தமற்ற விஷயங்களை பதிவிடுவது உண்மையில் உங்கள் நாளை மகிழ்விக்கிறதா? உங்களுக்கும் நீங்கள் வசிக்கும் அல்லது நீங்கள் சூழ்ந்திருக்கும் மக்களுக்கு இது மிகவும் மோசமானது. உண்மையில் இது ஒரு கோழைத்தனம். கடவுள் உங்களை உண்மையிலேயே ஆசீர்வதிப்பாராக! என பதிவிட்டிருந்தார்.

இருப்பினும் திரிஷாவின் இந்த பதிவிற்கு என்ன காரணம் என்று சரியாக தெரியவில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் உள்ள சிலரின் மீது நிச்சயமாக கோபத்தை வெளி காட்டியிருக்கிறார் என்பது தெரிகிறது.