தமிழகத்தில் கலைஞர் மகளிர் தொகை கிடைக்காத்தவர்கள்  தங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்வதற்கு இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது  https://kmut.tn.gov.in/login.html# என்ற இணையதளத்தில் சென்று பொதுமக்கள் நுழைவு என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆதார் எண்ணை அதில் உள்ளிட வேண்டும்.

பின்னர் ஆதாரோடு இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும். ஓடிபி மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு உள்ளே நுழைந்தால் விண்ணப்பத்தின் நிலையும், நிராகரிக்கப்பட்ட காரணங்களும் அதில் உங்களுக்கு காட்டப்படும். மேல்முறையீடு செய்ய விரும்புபவர்கள் பக்கத்தில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும்.