நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடலை பார்ப்பதற்காக அங்கே சென்ற தொண்டர்களை அங்கிருந்த காவல்துறையினர் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, அங்கேயிருந்த ஆதரவாளர்கள்,”உங்களுக்கு அவரு யாருன்னு தெரியுமா?” என காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே வந்த நடிகர் தீனா காவத்துறையினரிடம் மன்னிப்பு கேட்டு ஆதரவாளர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.