
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப பதவிகளுக்கு மாதம்தோறும் 15 ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெற மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்கள் 1.48 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது. இதற்கு தேர்வானவர்களின் வங்கி கணக்கு சரியானதுதானா என்பதை உறுதி செய்யும் வகையில் நேற்று ஒரு ரூபாய் அனுப்பி சோதனை செய்யப்பட்டு இருக்கும். அவ்வாறு ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தால் உங்களுக்கும் இன்று உரிமை தொகை கிடைக்கும். உடனே உங்க மொபைல் போனை எடுத்து செக் பண்ணி பாருங்க.