திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிபோதையில் பெண்ணுடன் நள்ளிரவில் நுழைந்த இளைஞர் பள்ளி வளாகத்தில் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வளாகத்தின் பின்புற கட்டிடத்தில் வாளாடி புது ரோட்டைச் சேர்ந்த நவீன் என்பவர் ஒரு பெண்ணுடன் இருந்தது குறித்து ஆசிரியர்கள் கேள்வி எழுப்ப, “இப்போ நாங்கள் கிளம்புறோம், உங்களுக்கு என்ன பிரச்சனை” என மிரட்டி பேசியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக பயன்படுத்தப்படும் அறையின் கதவுகளை உடைத்து, அங்கு மது அருந்தி மின்விசிறி, டியூப் லைட் போன்றவற்றை நவீன் உடைத்துள்ளார்.

கல்வி நிலையங்களில் ஏற்படும் இத்தகைய குற்றச்செயல்களை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.