சென்னை மாவட்டம் தாம்பரம் சானடோரியம் ஜெயா நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தனது வங்கி கணக்கில் 6000 ரூபாய் பணத்தை சொல்வதற்காக பெரும்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய பணத்தை எங்களிடம் கொடுத்தால் கூகுள் பே மூலம் உங்களது வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புகிறோம் எனக் கூறியுள்ளனர்.

இதனை நம்பி பிரகாஷ் அவர்களிடம் 6,000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி கூகுள் பே மூலம் பணம் அனுப்பாமல் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.