
நடிகர் சோனு சூட் பல்வேறு படங்களில் நெகடிவ் வேடங்களில் நடித்து பிரபலமானார். எனினும் நிஜ வாழ்க்கையில் மக்களால் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார். இவர் கொரோனா லாக்டவுன் சமயத்தில் மக்களுக்கு செய்த உதவிகள் தான் அதற்கு காரணம் ஆகும். இந்நிலையில் சோனு சூட் ரசிகர்கள் உடன் உரையாடும்போது அவருக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என ஒருவர் கேட்டிருக்கிறார்.
அதற்கு, தனக்கு விஜயகாந்தை தான் அதிகம் பிடிக்கும் என சோனு சூட் கூறியிருக்கிறார். மேலும் எனக்கு தமிழ் திரையுலகில் முதல் வாய்ப்பை கொடுத்தது அவர் தான். கள்ளழகர் திரைப்படத்தில் விஜயகாந்த்துடன் நடித்திருக்கிறேன் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

Vijaykanth sir.
He gave me my first break in a Tamil film …Kallalazagar. https://t.co/WCHMZjV0GA— sonu sood (@SonuSood) June 26, 2023