
பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவின் யமுனாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரு முக்கியமான மனிதனை சந்தித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். கைத்தல் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்ற நபர், மோடி பிரதமராகவதையும் அவரை நேரில் சந்திக்கும் வரையிலும் காலணிகளை அணிய மாட்டேன் என 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்த உறுதியைப் பின்பற்றி, காலமெல்லாம் காலில் செருப்பு இல்லாமல் இருந்துள்ளார். இந்த நெஞ்சை உருக்கும் தருணத்தில், மோடி அவருக்கு நேரில் செருப்பு அணியச் செய்து அவரது நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றினார். இந்த தருணம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரவேற்பை பெற்றுள்ளது.
View this post on Instagram
பின்னர் சமூக வலை தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “இன்று யமுனாநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கைத்தலிலிருந்து வந்த ராம்பால் காஷ்யப் அவர்களை சந்தித்தேன். அவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உறுதி எடுத்தார் – நான் பிரதமராகினால் மற்றும் அவரை நேரில் சந்தித்த பிறகே செருப்பு அணிவேன் என்றார். இவரைப் போல மக்களை சந்திக்கும்போது நான் மிக நெகிழ்கிறேன்,” என தெரிவித்தார்.
அதன் பிறகு இது போன்ற முடிவுகளால் உங்களுடைய உடலை நீங்கள் வருத்திக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்ட நிலையில் இந்த வீடியோவை அவர் instagram பக்கத்தில் வெளியிட அது மிகவும் வைரலாகி வருகிறது.