இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வைத்து தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள இந்த வழிமுறையை பாலோ பண்ணுங்க.

அதற்கு முதலில் https://tafcop.sancharsaathi.gov.in/telecomuser இணையதளம் முகவரிக்கு செல்ல வேண்டும்.

அதில் உங்களுடைய 10 இலக்க மொபைல் எண் மற்றும் கேப்சாவை பதிவு செய்த பிறகு வேலிடேட் கேப்சா என்பதை கிளிக் செய்யவும்.

உங்கள் மொபைலுக்கு வந்துள்ள ஓடிபி பதிவு செய்து லாகின் செய்யவும்.

இப்போது உங்கள் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட தேவையில்லாத எண்களை நீங்கள் பிளாக் செய்து கொள்ளலாம்.