இந்திய ரயில்வேயானது பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு அவ்வப்போது பல்வேறு விதிகளை உருவாக்குகிறது. மேலும் பல்வேறு பழைய விதிகளில் மாற்றம் செய்கிறது. அதில் ஒன்று டிக்கெட்டுகளை மாற்றுவதற்கான விதி ஆகும். ஒருவரிடம் உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட் இருந்து ஏதோ காரணத்தினால் அவரால் அந்த டிக்கெட்டில் பயணிக்க முடியவில்லை எனில், அத்தகைய சூழ்நிலையில் அவர் தன் டிக்கெட்டை குடும்ப உறுப்பினர் பெயரில் மாற்றலாம்.

இதன் காரணமாக டிக்கெட்டை கேன்சல் செய்து புது டிக்கெட் புக் செய்வதற்கான செலவு நீக்கப்படும். ரயில்வே துறையானது “குடும்பம்” எனும் வார்த்தையில் அப்பா, அம்மா, சகோதரி, சகோதரர், மகள், மகன், கணவன் (அ) மனைவியை மட்டுமே சேர்த்துள்ளது. அதாவது உங்களது டிக்கெட்டை இவர்களில் ஒருவருக்கு மட்டுமே மாற்ற இயலும். இச்சேவையை பெற திட்டமிடப்பட்ட ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பாக பயணிகள் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆஃப்லைனில் டிக்கெட் வாங்கி இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆன்லைனில் கெட்டிக் புக் செய்து இருந்தால், அதன் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் ஆதார் அட்டை (அ) வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக அருகில் உள்ள ரயில் நிலையத்தின் முன் பதிவு கவுண்டருக்கு போக வேண்டும். இங்கு நீங்கள் டிக்கெட் பரிமாற்றத்துக்கு அப்ளை பண்ணலாம்.