சிலர் மொபைல் எண்ணை அடிக்கடி மாற்றும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் மொபைல் எண்ணை மாற்றும்போது சிம்கார்டை உடைத்து எறிந்து விட்டு அதனை மறந்து விடுவர். இது போன்ற நேரத்தில் அந்த இணைப்பு சில நேரம் அப்படியே அவர் பெயரில் இருக்கும். இதை https://sancharsaathi.gov.in என்ற இணையதளம் மூலம் கண்டறிந்து தேவை என்றால் தக்க வைக்கவும் தேவையில்லை என்றால் துண்டிக்கவும் கோரிக்கை வைக்க முடியும்.

அதற்கு முதலில் இந்த இணையதள பக்கத்திற்கு சென்று அதில் இருக்கும் know your Mobile connections என்ற பகுதியை அழுத்தியதும் திறக்கும் புதிய பக்கத்தில் மொபைல் எண், கேப்சா, ஓடிபி பதிவிட்டு உள் நுழைந்தால் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது திரையில் காட்டும். அதில் தேவையான சிம் கார்டு எண்ணை தக்க வைக்கவும் தேவையில்லாத எங்களின் இணைப்பை துண்டிக்கவும் கோரிக்கை வைக்கலாம்.