
மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 25-ம் தேதி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மொத்தம் இருக் கூட்டணி கட்சிகள் களத்தில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ் முக் மகனும் நடிகருமான ரித்தேஷ் தேஷ் முக் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் தன்னுடைய சகோதரர்களான அமித் மற்றும் தீரஜ் ஆகியோர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது உங்கள் மதம் ஆபத்தில் இருக்கிறது என்று கூறுபவர்களின் மதம் தான் உண்மையில் ஆபத்தில் இருக்கிறது. நேர்மையாக உழைப்பவர்கள் தர்மம் செய்கிறார்கள். மதம் வேலை செய்யாதவர்களுக்கு தான் தேவைப்படுகிறது. அவர்களிடம் எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறுங்கள். முதலில் நீங்கள் வளர்ச்சியை பற்றி பேச வேண்டும். மகாராஷ்டிராவில் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தீரஜ் வென்ற நிலையில் அதேபோன்று இந்த முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அவரை நீங்கள் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.