ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் அங்கப்பன்(71). இவர் அந்தியூர் அருகே உள்ள விராலிகாட்டூர் பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு காட்டு யானை வந்தது.

அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கப்பன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். இருப்பினும் காட்டு யானை விடாமல் துரத்தி சென்று அங்கப்பனை தூக்கி வீசி காலால் மிதித்தது. இதனால் படுகாயம் அடைந்த அங்கப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.