இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் சரியானதாக இருப்பது அவசியம். இதனால் சில தரவுகளை நாம் புதுப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் அதில் ஒரு சில விஷயங்களுக்கு வரம்பு உள்ளது.

அதாவது உங்களுடைய பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை ஆதார் கார்டில் ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும்.

உங்களுடைய பெயரை இரண்டு முறை மாற்றலாம். மூன்றாவது முறை பெயரை மாற்ற ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். UIDAI பிராந்தி அலுவலகத்திற்குச் சென்று உங்களுடைய பெயரை புதுப்பிக்க அனுமதி பெற வேண்டும்.

நீங்கள் குடியிருப்பு முகவரியை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை அல்லது பிற சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். இவை ஆன்லைனில் புதுப்பிக்கப்படும்.

மேலும் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையான மோசடிகளில் ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்படுவதால் ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் மட்டும் தொலைபேசியில் பெற்ற ஆதார் ஓடிபி- ஐ தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.