
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் உங்களுடைய ஆதார் எண் எதற்கெல்லாம் பயன்படுகிறது என அறிந்து கொள்ளலாம். அதற்கான வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணைய தளம் வழங்குகின்றது. இதனை UIDAI இணையதளம் அல்லது மை ஆதார் செயலி மூலம் அறிய முடியும்.
ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான ttps://resident.uidai.gov.in/aadhaar-auth-history என்ற பக்கத்திற்கு சென்று திரையில் தோன்றும் பாதுகாப்பு குறியீட்டான ஆதார் எண் அல்லது VID உள்ளிட வேண்டும். அதன் பிறகு ஓடிபி உள்ளிட்டு சமர்பித்தால் உறுதிப்படுத்துதல் வகை, தேதி வரம்பு மற்றும் நீங்கள் பார்க்க விரும்பும் பதிவுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரு பக்கம் திரையில் தோன்றும். அதில் ஒரே நேரத்தில் 50 பதிவுகளை நீங்கள் பார்க்க முடியும். இதன் மூலமாக உங்களுடைய ஆதார் எண் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.