
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் உங்கள் ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க உங்கள் ஆதார் அட்டை எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை சரி பார்க்கும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகின்றது.
அதற்கு முதலில் https://uidai.gov.in/en/என்ற இணையதள பக்கத்திற்கு சென்று எனது ஆதார் என்பதற்கு விருப்பத்தை கண்டறிந்து கிளிக் செய்யவும்.
பிறகு ஆதார் அங்கீகார வரலாறு விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
அங்கு ஆதார் எண் மற்றும் ஓடிபி உள்ளிட்டால் அங்கீகரிப்பு வரலாறு தோன்றும்.
ஓடிபி மூலம் பயோமெட்ரிக் கடந்த ஆறு மாதங்களாக உங்கள் ஆதார் எந்தெந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டது என்ற புள்ளி விவரங்கள் தெரியும்.