இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் தற்போது உருவாகிவிட்டது. குழந்தை பள்ளி சேர்க்கை முதல் இறப்புச் சான்றிதழ் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தான் அவசியம். அதே சமயம் முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை சிலர் தெரியாமல் தொலைத்து விடுகின்றனர். இவர்கள் இணையதளம் அல்லது நேரடியாக அலுவலகம் மூலமாக இரண்டு வழிகளில் மீண்டும் தங்களை ஆதார் அட்டையை பெற முடியும்.

ஆன்லைனில் பெற செயல்பாடுகள்:

இதற்கு முதலில் ஆதார் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் my aadhar என்பதை கிளிக் செய்து, aadhar download என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு retrieve EIDஎன்பதை கிளிக் செய்தால் உங்கள் ஆதார் அட்டையின் நம்பரை எடுக்க விரும்புகிறீர்களா அல்லது Enrollment நம்பரை எடுக்க விரும்புகிறீர்களா என்ற இரண்டு விருப்பங்கள் இருக்கும்.

அதில் ஆதார் அட்டையின் நம்பரை தேர்வு செய்து ஆதார் அட்டையில் உங்களின் பெயர் எப்படி இருந்ததோ அதனை அப்படியே கொடுக்க வேண்டும்.

அதன்பிறகு ஆதார் எண்களை பதிவு செய்து கேப்சாவை உள்ளிட வேண்டும்.

பின்னர் ஓடிபி ஆப்ஷனை தேர்வு செய்து சரியாக பதிவிட்டால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்களின் ஆதார் எண் மொபைலில் வந்துவிடும். அதை வைத்து நீங்கள் உங்கள் ஆதாரை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.