இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஒருவரின் ஆதார் பிறரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை அறியவும் அது குறித்து புகார் அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி யாரேனும் ஒருவருக்கு தனது ஆதாரை பிறர் பயன்படுத்தியுள்ளனரா என்ற சந்தேகம் ஏற்பட்டால் https://myaadhar.uidai.gov.in/என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று login பகுதியை அழுத்த வேண்டும்.

அதில் கேட்கப்படும் ஆதார் எண் மற்றும் கேப்சாவை முதலில் பதிவிட வேண்டும். ஆதார் எண் மற்றும் கேப்சாவை உள்ளிட்டதும் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி பதிவிட்டு, authentication History என்ற பகுதியில் select Modality பிரிவில் ALL என்பதை தேர்வு செய்து தேதியை தேர்ந்தெடுத்தால் நமது ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது வரிசையாக திரையில் தோன்றும். அதை வைத்து ஆதார் மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்து UIDAI தளத்தில் புகார் அளிக்கலாம்.